எகிப்து - கீசா பிரமிடுகளுக்கு அடியில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

எகிப்தில், பிரமிடுகளை ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள், கீசா பிரமிடுக்கு அடியில் 30 அடி நீளமுடைய சுரங்கப்பாதை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இது கீசா பிரமிடுகளின் பிரதான வாயிலின் அருகே அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கை, 'நேச்சர்' இதழில் வெளிவந்துள்ளது. மேலும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் பாதை மூலம், பிரமிடுகளின் கட்டுமானம் குறித்த பல தகவல்கள் கிடைக்கப் பெறும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த சுரங்கப்பாதை முற்றுப் பெறாத நிலையில் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், […]

எகிப்தில், பிரமிடுகளை ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள், கீசா பிரமிடுக்கு அடியில் 30 அடி நீளமுடைய சுரங்கப்பாதை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இது கீசா பிரமிடுகளின் பிரதான வாயிலின் அருகே அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கை, 'நேச்சர்' இதழில் வெளிவந்துள்ளது. மேலும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் பாதை மூலம், பிரமிடுகளின் கட்டுமானம் குறித்த பல தகவல்கள் கிடைக்கப் பெறும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த சுரங்கப்பாதை முற்றுப் பெறாத நிலையில் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், இது பிரமிடுகளின் எடையை தாங்குவதற்காக அமைக்கப்பட்டிருக்கலாம் அல்லது மொத்த எடையை பிரிப்பதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். இதன் அருகில் உள்ள பல்வேறு சுரங்க அறைகள் இன்னும் கண்டறியப்படாமலும், திறக்கப்படாமலும் உள்ளதாக கூறுகின்றனர்.

காஸ்மிக் ரே மியோன் ரேடியோகிராபி தொழில்நுட்பம் மூலம் இந்தப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 மில்லி மீட்டர் தின்னமுடைய எண்டோஸ்கோப்பை, பிரமிடுகளில் உள்ள கற்களுக்கு இடையில் உள்ள இடைவெளி வழியாக செலுத்தி, இந்த பாதை தொடர்பான புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இங்கு தொடர்ச்சியாக விஞ்ஞானிகள் குழு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu