காசா மக்களுக்கு உதவ இயலாமல் எகிப்து உதவிப்பொருட்கள் தேக்கம்

October 18, 2023

ரஃபே பகுதி திறக்கப்படாததால் காசா மக்களுக்கு உதவ இயலாமல் எகிப்து உதவிப்பொருட்கள் தேக்கம் அடைந்தது. இஸ்ரேல் காசா மீது குண்டு மழை பொழிகிறது. காசாவில் இருக்கும் பொது மக்களுக்கு அடிப்படை மனிதாபிமான உதவிகள் செய்ய ஐநா ஊழியர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் காசா மக்களுக்கு உதவ எகிப்து நாடு முன்வந்துள்ளது. ஆனால் எகிப்து நாடு அளிக்கும் பொருட்கள் மக்களை சென்றடைய செய்வதில் இஸ்ரேல் ஒத்துழைக்கவில்லை என்று அந்த நாடு குற்றம் சாட்டியுள்ளது. இதனால் டன் கணக்கான உதவிப்பொருட்கள் […]

ரஃபே பகுதி திறக்கப்படாததால் காசா மக்களுக்கு உதவ இயலாமல் எகிப்து உதவிப்பொருட்கள் தேக்கம் அடைந்தது.
இஸ்ரேல் காசா மீது குண்டு மழை பொழிகிறது. காசாவில் இருக்கும் பொது மக்களுக்கு அடிப்படை மனிதாபிமான உதவிகள் செய்ய ஐநா ஊழியர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் காசா மக்களுக்கு உதவ எகிப்து நாடு முன்வந்துள்ளது. ஆனால் எகிப்து நாடு அளிக்கும் பொருட்கள் மக்களை சென்றடைய செய்வதில் இஸ்ரேல் ஒத்துழைக்கவில்லை என்று அந்த நாடு குற்றம் சாட்டியுள்ளது. இதனால் டன் கணக்கான உதவிப்பொருட்கள் தேங்கியுள்ளதாக கூறியுள்ளது.ரஃபே பகுதி வாயிலாக அதிகாரப்பூர்வமாக காசா பகுதிக்குள் நுழைய முடியும் என்ற போதிலும் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருவதால் அவ்வழியே சென்று பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்ய இயலவில்லை என்று எகிப்து கூறுகிறது. இதற்கிடையே எகிப்து வெளியுறவு துறை மந்திரி சமய் சவுக்கிரி கூறுகையில், காசா பகுதியில் வாழும் பாலஸ்தீன பொதுமக்களை துன்பத்திலிருந்து விடுவிக்க அவசிய தேவை ஏற்பட்டுள்ளது. இதுவரை இஸ்ரேலுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு ஏற்படவில்லை. இதுவரை ரஃபே வழியாக பாதை திறக்கப்படவில்லை. அதை திறந்தால் மட்டுமே உள்ளே இருக்கும் மக்கள் வெளியேற முடியும். வெளியே உள்ளவர்கள் உள்ளே சென்று உதவி பொருட்களை வழங்க முடியும் என்றார். ரஃபே பகுதி சிறிது நேரத்திற்காகவாது திறந்திருக்கும் என்று எதிர்பார்த்ததாக அமெரிக்க அதிகாரிகளும் கூறினர்.தற்போது எகிப்திய எல்லை பகுதியான அல்ரிஷ் நகரில் உதவிப்பொருட்கள் வாகனங்களில் தேங்கி கிடைக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu