இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எகிப்து நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் தி நைல் விருது வழங்கப்பட்டுள்ளது. எகிப்து அதிபர் அஃப்தல் பட்டா இந்த விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கினார். எகிப்துக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த மோடியிடம் விருது ஒப்படைக்கப்பட்டது.
கடந்த குடியரசு தினத்தில், எகிப்து அதிபர் அஃப்தல் பட்டா இந்தியாவின் சிறப்பு விருந்தினராக தில்லிக்கு வருகை தந்திருந்தார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியை அவர் எகிப்திற்கு அழைத்தார். அவரது அழைப்பை ஏற்று, சனிக்கிழமை அன்று அமெரிக்காவிலிருந்து எகிப்திற்கு பிரதமர் சென்றிருந்தார். அவரது எகிப்து வருகையின் போது, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமரின் எகிப்து பயணம் இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று இரு தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.