எகிப்தை சேர்ந்த புத்தாக்க நிறுவனம் ஒன்று, பிளாஸ்டிக் பைகளை டைல்ஸ் ஆக மாற்றும் பணியில் ஈடுபடத் துவங்கி உள்ளது. இந்த முறையில் உருவாக்கப்படும் டைல்ஸ், சிமெண்டை விட கடினமானதாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. வரும் 2025 ஆம் ஆண்டுக்குள், கிட்டத்தட்ட 5 பில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பைகளை, டைல்ஸ் ஆக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய தரை கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் சேருவது தவிர்க்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள நாடுகளில், எகிப்து அதிகம் மாசடைந்த நாடாக உள்ளது. கிட்டத்தட்ட 74000 டன் பிளாஸ்டிக் குப்பைகள் ஒவ்வொரு வருடமும் கடலில் கலக்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம், சர்வதேச காலநிலை மாற்றத்திற்கான மாநாட்டை எகிப்து தொகுத்து வழங்கியது. அதனைத் தொடர்ந்து, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் அந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், எஞ்சியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை டைல்ஸ் ஆக மாற்றும் பணியில் அந்நாடு இறங்கியுள்ளது.