ஈச்சர் மோட்டார்ஸ் நிகர லாபம் 49% அதிகரிப்பு

ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 49% உயர்ந்துள்ளதாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 906 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே கடந்த 2022 மார்ச் மாத இறுதியில், 610 கோடி ரூபாய் அளவில் லாபம் பதிவு செய்யப்பட்டு இருந்தது. மேலும், கடந்த காலாண்டில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 3804 கோடியாக பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டில் […]

ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 49% உயர்ந்துள்ளதாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 906 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே கடந்த 2022 மார்ச் மாத இறுதியில், 610 கோடி ரூபாய் அளவில் லாபம் பதிவு செய்யப்பட்டு இருந்தது. மேலும், கடந்த காலாண்டில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 3804 கோடியாக பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டில் 3193 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், ஒட்டுமொத்தமாக நிறுவனத்தின் நிகர லாபம் 2914 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2022-ம் நிதி ஆண்டில் 1677 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், 2024 ஆம் நிதி ஆண்டில், 1000 கோடி ரூபாய் ரொக்கப் பண ஒதுக்கீட்டிற்கு ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu