ஓமனில் எண்ணெய் கப்பல் விபத்தில் 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
ஓமனில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்த விபத்தில் சிக்கிய நபர்களை தேடும் பணியில் இந்திய கடற்படையை சேர்ந்த போர்க்கப்பல் ஐ என் எஸ் ஸ்டேதேஜ் ஈடுபட்டுள்ளது. இந்த கப்பலில் 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் பயணித்தனர். மற்ற மூவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த கப்பல் ஏமன் நாட்டின் துறைமுக நகரான ஏடன் நோக்கி சென்று கொண்டிருந்தது. கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காணாமல் போனவர்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.