பாகிஸ்தானில் நடைபெற்ற தாக்குதலில் 8 பாதுகாப்புப் படையினர், 9 பயங்கரவாதிகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் பொதுமக்கள், போலீசாரின் மீது தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன. இந்நிலையில், கைபர் பக்துவா மாகாணத்தின் திரக் மைதான் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் பாதுகாப்புப்படையினருக்கு கிடைத்தது. அதன் பிறகு, பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர சோதனை நடத்திய போது, பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினார்கள். பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 8 பாதுகாப்புப் படையினர், 9 பயங்கரவாதிகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். போலீசார் 7 பேர் கடத்தப்பட்டுள்ளார்கள். மோதளுக்கு பின்னர் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் அதிகரிக்கப்பட்டுள்ளார்கள்.














