2023 எல் நினோ பாதிப்புகள் - விஞ்ஞானிகள் அறிக்கை

சராசரியாக 5 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை, ‘எல் நினோ’ என்ற காலநிலை நிகழ்வு நடைபெறுகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டு, எல் நினோ வருடமாக கணிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டின் பிற்பகுதியில், எல் நினோ விளைவுகளை உலகம் சந்திக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திடீர் புயல், அதீத மழை, தீவிர வறட்சி ஆகியவை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எல் நினோ காலநிலை நிகழ்வின் போது, பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை அதிகமாகிறது. இதன் காரணமாக, பருவம் […]

சராசரியாக 5 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை, ‘எல் நினோ’ என்ற காலநிலை நிகழ்வு நடைபெறுகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டு, எல் நினோ வருடமாக கணிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டின் பிற்பகுதியில், எல் நினோ விளைவுகளை உலகம் சந்திக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திடீர் புயல், அதீத மழை, தீவிர வறட்சி ஆகியவை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல் நினோ காலநிலை நிகழ்வின் போது, பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை அதிகமாகிறது. இதன் காரணமாக, பருவம் தப்பிய மழை, பருவம் தவறிய வெப்பம் ஆகியவை ஏற்படும். இதனால், மக்களின் பொருளாதாரம் மிகுந்த பாதிப்பை அடையும். அந்த வகையில், 2023 பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

விஞ்ஞானிகளின் அறிக்கை படி, “தற்போதைய நிலையில், உலகின் எந்தெந்த பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக அதிக வெப்பம் நிலவுகிறதோ, அந்த பகுதிகளில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும். ஜப்பான் நாட்டில் காட்டுத்தீ ஏற்படலாம். ஜப்பானில் வழக்கத்தை விட வெப்பமான வசந்த காலம் ஏற்பட்டுள்ளதற்கு, எல்நினோ நிகழ்வே காரணம். மேலும், எல் நினோ காரணமாக, அமெரிக்காவில் வழக்கத்திற்கு மாறான அதீத குளிர் மற்றும் தீவிர வறட்சி ஏற்படும். சர்வதேச அளவில் எல் நினோ காரணமாக ஏற்படும் பொருளாதார இழப்பு 3 ட்ரில்லியன் டாலர் அளவில் இருக்கலாம்” என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, எல் நினோ பாதிப்புகள் 70% உணரப்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். குறிப்பாக, பருவமழை பற்றாக்குறை சூழல் ஏற்படலாம் என கருதப்படுகிறது. எனவே, வேளாண் ஆராய்ச்சி கழகங்கள், வானிலை ஆய்வு மையங்கள் ஆகியவை இணைந்து, விளைவுகளை சமாளிக்கும் ஆலோசனைகள் குறித்து கலந்துரையாடி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu