சரத் பவார் கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் சந்திர பவார் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிக எம்.எல்.ஏக்கள் சரத் பவார் மருமகனான அஜித் பவாருக்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டது. இதனால் அஜித் பவாரின் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதனை அடுத்து கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை அஜித் பாவாருக்கு கொடுப்பதாக தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதனால் மூத்த தலைவரான சரத் பவார் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அணியின் பெயரை தேர்வு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். அதனை தொடர்ந்து தனது கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் சந்திர பவார் என பெயர் சூட்டி உள்ளார். இந்த கட்சி பெயருக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.














