6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு

March 19, 2024

தலைமை தேர்தல் ஆணையம் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றுவதற்கு உத்தரவிட்டுள்ளது. குஜராத், உத்திரபிரதேசம், பீகார், ஜார்கண்ட்,இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டிஜிபி ராஜ்குமாரை இடமாற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று மிசோரம் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பொது நிர்வாக துறையின் செயலாளர்களும் தங்கள் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் நெருங்கி வரும் வேளையில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் […]

தலைமை தேர்தல் ஆணையம் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றுவதற்கு உத்தரவிட்டுள்ளது.

குஜராத், உத்திரபிரதேசம், பீகார், ஜார்கண்ட்,இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற தலைமை தேர்தல் ஆணையம்
உத்தரவிட்டுள்ளது. மேலும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டிஜிபி ராஜ்குமாரை இடமாற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று மிசோரம் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பொது நிர்வாக துறையின் செயலாளர்களும் தங்கள் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் நெருங்கி வரும் வேளையில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே மாவட்டங்கள் மற்றும் சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்த விதிகள் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu