பிரிட்டனில் உள்ள ஸ்காட்லாந்து பிராந்தியத்தில் சிறப்பு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் ரிஷி சுணக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அண்மைக்காலமாக, கன்சர்வேட்டிவ் கட்சிக்கு எதிராக தொழிலாளர் கட்சி வலுப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், ஸ்காட்லாந்து பிராந்தியத்தில் தொழிலாளர் கட்சி வெற்றியடைந்துள்ளது. இதன் மூலம், பிரிட்டன் நாடாளுமன்றத்தில், ஸ்காட்லாந்து பிராந்தியத்துக்கான தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் தொழிலாளர் கட்சி வசம் சென்றுள்ளன. மேலும், தொழிலாளர் கட்சிக்கான ஆதரவு 15 புள்ளிகளில் இருந்து 20 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.














