தேர்தல் சின்னம் கட்சியின் சொத்தல்ல: புதுடில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

November 21, 2022

தேர்தல் சின்னத்தை ஒரு கட்சியின் தனிப்பட்ட சொத்தாக எடுத்துக் கொள்ள முடியாது என புதுடில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாகப் பிரிந்தது. சமீபத்தில் அங்கு நடந்த இடைத் தேர்தலின்போது, அந்த கட்சியின் தேர்தல் சின்னமான வில், அம்பு முடக்கப்பட்டது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு 'தீப்பந்தம்' சின்னம் ஒதுக்கப்பட்டது. அதை உத்தவ் தாக்கரே தரப்புக்கு ஒதுக்கியதை ஏற்க முடியாது என கூறி, சமதா கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கை புதுடில்லி உயர் நீதிமன்றத்தின் தனி […]

தேர்தல் சின்னத்தை ஒரு கட்சியின் தனிப்பட்ட சொத்தாக எடுத்துக் கொள்ள முடியாது என புதுடில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாகப் பிரிந்தது. சமீபத்தில் அங்கு நடந்த இடைத் தேர்தலின்போது, அந்த கட்சியின் தேர்தல் சின்னமான வில், அம்பு முடக்கப்பட்டது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு 'தீப்பந்தம்' சின்னம் ஒதுக்கப்பட்டது. அதை உத்தவ் தாக்கரே தரப்புக்கு ஒதுக்கியதை ஏற்க முடியாது என கூறி, சமதா கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கை புதுடில்லி உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள், தேர்தல் சின்னம் என்பதை ஒரு கட்சியின் தனிப்பட்ட சொத்தாக கருத முடியாது. தேர்தல்களில் சரியாக செயல்படாத கட்சிகளின் சின்னத்தை பொது சின்னமாக்க அறிவிக்க தேர்தல் கமிஷனுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று உத்தரவிட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu