சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இரண்டு நாட்கள் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை கடற்கரை தாம்பரம் இடையே இன்று மற்றும் நாளை இரவு நேரத்தில் இயக்கப்படும் 15 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி சென்னை கடற்கரையிலிருந்து இரவு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கமாக தாம்பரத்திலிருந்து இன்று இரவு சென்னைக்கு வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. அதைப்போல் சென்னை கடற்கரையில் இருந்து நாளை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்களும், தாம்பரத்திலிருந்து சென்னைக்கு புறப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் 20ம் தேதி காலை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து இன்று மற்றும் நாளை இரவு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் எழும்பூர் கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து இன்று மற்றும் நாளை இரவு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில், தாம்பரம் சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது