மின்சார இருசக்கர வாகனம் வாங்கும் தொழிலாளர்களுக்கு உதவியாக தமிழக அரசு இருபதாயிரம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
சொமாட்டோ, ஸ்விக்கி, அமேசான் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் டெலிவரி ஊழியர்கள், தமிழ்நாடு இணைய தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக இருந்தால் இந்த மானியத்திற்குத் தகுதியானவர்களாக கருதப்படுவர். ஆரம்ப கட்டமாக 2,000 பேருக்கு இந்த உதவி வழங்கப்படும். புதிய மின்சார இருசக்கர வாகனம் வாங்கும் போது, தலா ரூ.20,000 வரை அரசின் நிதி உதவி பெற முடியும். விண்ணப்பிக்க விரும்பும் தொழிலாளர்கள், tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது அருகிலுள்ள இ-சேவை மையங்களிலோ நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த மானியத் திட்டம், தொழிலாளர்களுக்கு நம்பிக்கையையும் நிவாரணத்தையும் அளிக்கின்றது. மேலும் இது இயற்கையை பாதுகாக்கும் நோக்கத்துடன் தொழில்நுட்பத்தை இணைக்கும் முயற்சியாகும்.














