'ஆதார்' எண் பெற ஆணையத்திடம் அனுமதி கோர மின் வாரியம் முடிவு

October 19, 2022

மின் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணை 'ஆதார்' எண்ணுடன் இணைக்க தமிழக மின் ஆளுமை முகமை வாயிலாக, மத்திய அரசின் ஆதார் ஆணையத்திடம் அனுமதி கோர மின் வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழக மின் வாரியம் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும்; 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. இலவச மின்சாரத்தில் முறைகேடை தடுக்க நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களின் 'ஆதார்' எண்ணை இணைக்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த […]

மின் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணை 'ஆதார்' எண்ணுடன் இணைக்க தமிழக மின் ஆளுமை முகமை வாயிலாக, மத்திய அரசின் ஆதார் ஆணையத்திடம் அனுமதி கோர மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழக மின் வாரியம் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும்; 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. இலவச மின்சாரத்தில் முறைகேடை தடுக்க நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களின் 'ஆதார்' எண்ணை இணைக்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது.

மக்களிடம் இருந்து ஆதார் எண் பெற 'யுனிக் ஐடென்டிபிகேஷன் அத்தாரிட்டி ஆப் இந்தியா' என்ற இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். எனவே, மின் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணை 'ஆதார்' எண்ணுடன் இணைக்கும் பணிக்கு தமிழக மின் ஆளுமை முகமை வாயிலாக ஆதார் ஆணையத்திடம் அனுமதி கோர மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

நவம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் இருந்து மின் நுகர்வோரிடம் இருந்து ஆதார் எண் பெறும் பணியை துவக்க வாரியம் திட்டமிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu