சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் - குறுந்தொழில்கள் சங்கம் கோரிக்கை

November 7, 2022

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் (டான்ஸ்டியா) தலைவர் கே.மாரியப்பன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கடந்த செப்.9-ம்தேதி முதல் மின் கட்டணம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, முதல்வரை நேரில் சந்தித்து டான்ஸ்டியா சார்பில் கோரிக்கை மனு […]

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் (டான்ஸ்டியா) தலைவர் கே.மாரியப்பன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கடந்த செப்.9-ம்தேதி முதல் மின் கட்டணம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, முதல்வரை நேரில் சந்தித்து டான்ஸ்டியா சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கடந்த செப்.4-ம் தேதி வரை குறைந்த மின்னழுத்த மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு ஒரு கிலோ வாட்டுக்கு மாலை நேரங்களில், அதாவது, 6 முதல் 9 மணி வரை ரூ.35 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது 50 கிலோ வாட்டுக்கு கீழ் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.75, 50 முதல், 112 கிலோவாட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.150, 112 கிலோவாட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ரூ.550 என உயர்த்தப்பட்டுள்ளது.

செப்.5-ம் தேதி முதல் குறைந்தழுத்த (எல்டி) மின்சாரம்உபயோகிப்பவர்களுக்கு ‘பீக்அவர்’ நேரங்களில் ஒரு யூனிட் விலை ரூ.9.38 எனவும், உயரழுத்த மின்சாரம் (எச்டி) உபயோகிப்பவர்களுக்கு ஒரு யூனிட் விலை ரூ.6.75 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் மின் கட்டணம் ஆந்திராவில் ரூ.7.21, கேரளாவில் ரூ.6.30, தெலங்கானாவில் ரூ.7.21, கர்நாடகாவில் ரூ.8 என வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் இது ரூ.9.38 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இதை ரூ.6.75 ஆக குறைக்கவேண்டும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu