தென் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக மின்விநியோகம், தொலைதொடர்பு சேவைகள் ஆகியவை பாதிக்கப்பட்டது.
தென் மாவட்டங்களில் கடந்த 16, 17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நெல்லை தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தால் பலத்த பாதிப்படைந்தது.இதனால் ஏராளமான இடங்களில் பாலங்களுடன், சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது . மேலும் மின்விநியோகம், தொலைதொடர்பு சேவைகள் ஆகியவை மிகவும் பாதிப்புக்குள்ளானது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு ஒரு வாரத்திற்கு மேலாக மின்விநியோகம் முழுமையாக வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் முழு மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.