வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்“ ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. ரூ.1,00,000/- க்கான காசோலை, ரூ.9,000/- மதிப்புள்ள ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.
2023-ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் (Applications) வீர, தீரச் செயல்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவோ அல்லது <https://awards.tn.gov.in/>என்ற இணைய தளம் மூலமாகவோ மட்டுமே 15.12.2022-க்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.