எலான் மஸ்கின் OpenAI என்னும் நிறுவனம், ChatGPT என்ற, செயற்கை நுண்ணறிவில் இயங்கும் தேடுபொறி போன்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இது, கூகுளுக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், chatbot அமைப்பிலான இந்த செயலி, பயனர்கள் தேடும் தகவலை நேரடியாக காட்டக் கூடிய வகையில் உள்ளது.
பொதுவாக, கூகுள் தேடுபொறியில் ஒரு தகவலைத் தேடினால், பல இணையதளங்களின் லிங்க் காட்டப்படும். ஆனால், சாட்ஜிபிடி மூலம் தேடும் பட்சத்தில், பல லட்சம் இணைய தளங்களை சில நொடிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஆராய்ந்து, நேரடியாக தேடிய தகவல் மட்டுமே (லிங்க் விவரங்கள் இடம்பெறாது) வழங்கப்படுகிறது. எனவே, இது கூகுள் நிறுவனத்தின் தேடுபொறி வசதியை விட பல மடங்கு சிறந்ததாக கருதப்படுகிறது. தற்போது பீட்டா பரிசோதனை கட்டத்தில் உள்ள இந்த செயலியை 10 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.