ப்ளூம்பெர்க்கின் தகவலின்படி, மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு $439.2 பில்லியனாக உயர்ந்துள்ளது. அதன்படி, $400 பில்லியன் சொத்து மதிப்பு கொண்ட முதல் மனிதர் என்ற வரலாறை மஸ்க் படைத்துள்ளார்.
எலான் மஸ்க் சொத்து மதிப்பு உயர்வுக்கு SpaceX-ல் உள்ள தனது பங்குகளை $50 பில்லியனுக்கு மஸ்க் விற்றதே ஆகும். அதன்படி, இன்சைடர் உடனான ஒப்பந்தம் மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. SpaceX நிறுவனம் தற்போது $350 பில்லியன் ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், SpaceX உலகின் மிகவும் மதிப்புமிக்க தனியார் புத்தாக்க நிறுவனமாக மாறியுள்ளது. மேலும், மஸ்கின் பிற நிறுவனங்களின் மதிப்பும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக, டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, டெஸ்லாவின் பங்கு மதிப்பு இவ்வருடத்தில் 65% உயர்வை அடைந்துள்ளது. xAI-யின் மதிப்பும் இரட்டிப்பாகி $50 பில்லியனாக உயர்ந்துள்ளது.