இதுவரை உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க், தற்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். எலான் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களின் தலைவர் ஆவார். அண்மையில், ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கைப்பற்றியதும், அதைத் தொடர்ந்து டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு வெகுவாக குறைந்ததும், மஸ்கின் பின்னடைவுக்கு முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுகிறது.
ஃபோர்ப்ஸ் தரவுகளின் படி, எலான் மஸ்கின் சொத்து மதிப்பு, 2022 ஆம் ஆண்டில் மட்டும், 200 மில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது. எனவே, அவர் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். முதல் இடத்தை, ஆடம்பரப் பொருட்கள் விற்கும் நிறுவனமான LVMH-ன் தலைமை செயல் அதிகாரி பெர்னாட் அர்னால்ட் கைப்பற்றியுள்ளார். எலான் மஸ்க், கடந்த செப்டம்பர் 2021 முதல் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.