இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் சேவை தொடங்கினார் மஸ்க்

May 20, 2024

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்க உள்ளார். இதற்காக அவர் நேற்று இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சென்றுள்ளார். அங்கு உள்ள பொது சுகாதார மருத்துவமனையில் இந்தோனேசிய ஜனாதிபதி அதிபர் ஜோகோ விடோ உடன் இணைந்து விழா ஒன்றில் இந்த சேவையை தொடங்க உள்ளார். அதோடு இந்தோனேசியாவின் கல்வித்துறை மற்றும் சுகாதாரத் துறைகளில் இணைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் சுமார் 17,000 தீவுகள் உள்ளது. […]

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்க உள்ளார்.

இதற்காக அவர் நேற்று இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சென்றுள்ளார். அங்கு உள்ள பொது சுகாதார மருத்துவமனையில் இந்தோனேசிய ஜனாதிபதி அதிபர் ஜோகோ விடோ உடன் இணைந்து விழா ஒன்றில் இந்த சேவையை தொடங்க உள்ளார். அதோடு இந்தோனேசியாவின் கல்வித்துறை மற்றும் சுகாதாரத் துறைகளில் இணைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் சுமார் 17,000 தீவுகள் உள்ளது. இதில் 27 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இந்தோனேசியாவின் தொலைதூரப் பகுதிகளுக்கு ஸ்டார்லிங் செயற்கைக்கோள் மூலம் இணைய வசதியை ஏற்படுத்த மஸ்கின் ஸ்பேஸ் நிறுவனத்துடன் நீண்ட காலமாக இந்தோனேசிய அரசு பேச்சு வார்த்தையில் இருந்தது. இந்த நிகழ்ச்சியின் போது மஸ்க் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தொலைதூர மருத்துவ மையங்களுக்கு இது உயிர் காக்கும் சேவையாகும். கல்விக்கும் ஒரு வாய்ப்பாக இந்த சேவை இருக்கும் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu