நிகழாண்டில் ஏழ்மை வயப்பட்ட கோடீஸ்வரராக எலான் மஸ்க் சாதனை படைத்துள்ளார். நிகழாண்டில் மட்டுமே அவரது சொத்து மதிப்பு இழப்பு 29.9 பில்லியன் டாலர்கள் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஆறு மாதத்தில் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 251.3 பில்லியனில் இருந்து 221.4 பில்லியன் ஆக சரிந்துள்ளது. வேறு எந்த கோடீஸ்வரர்களை விடவும் குறுகிய காலத்தில் அதிக இழப்பை எலான் மஸ்க் சந்தித்துள்ளதாக போர்ப்ஸ் அறிக்கை கூறுகிறது. குறிப்பாக, டெஸ்லா நிறுவனம் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளதால், எலான் மஸ்க் இக்கட்டான சூழலில் உள்ளதாக கூறப்படுகிறது.