உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் தோற்றுநர் ஜெஃப் பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்கை பின்னுக்குத் தள்ளி ஜெஃப் பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பங்குச் சந்தையில், நேற்றைய வர்த்தக நாளின் போது, டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 7.2% சரிவை பதிவு செய்தன. இதன் விளைவாக, எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 197.7 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. எனவே, அவர் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும், 200.3 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் ஜெஃப் பெசோஸ் முதலிடத்தில் உள்ளார்.