புதிய நகரத்தை கட்டமைக்கும் திட்டத்தில் எலான் மஸ்க்

March 13, 2023

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் பகுதியில், எலான் மஸ்க் கிட்டத்தட்ட 3500 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது, எலான் மஸ்க் தலைமையில் இயங்கும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்காக கட்டமைக்கப்படும் பிரத்தியேக நகரத்திற்கானது என்று சொல்லப்படுகிறது. இதில், டெஸ்லா, போரிங், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஊழியர்கள் தங்க வைக்கப்படுவர் என்று கருதப்படுகிறது. இந்த நகரத்திற்கு, ‘சினைல்புரூக்’ (SnailBrook) என்று எலான் மஸ்க் பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நகரத்தில், நீச்சல் குளம், விளையாட்டு மைதானம் […]

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் பகுதியில், எலான் மஸ்க் கிட்டத்தட்ட 3500 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது, எலான் மஸ்க் தலைமையில் இயங்கும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்காக கட்டமைக்கப்படும் பிரத்தியேக நகரத்திற்கானது என்று சொல்லப்படுகிறது. இதில், டெஸ்லா, போரிங், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஊழியர்கள் தங்க வைக்கப்படுவர் என்று கருதப்படுகிறது. இந்த நகரத்திற்கு, ‘சினைல்புரூக்’ (SnailBrook) என்று எலான் மஸ்க் பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நகரத்தில், நீச்சல் குளம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட குடியிருப்பு பகுதி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. முன்னதாக, கடந்த 2020 ஆம் ஆண்டு, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை இடத்தை கலிபோர்னியாவிலிருந்து டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்ற உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். அது மட்டுமல்லாது, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போரிங் நிறுவனங்களின் உற்பத்தி மையங்கள் டெக்ஸாஸில் உள்ளன. எனவே, இந்த நகரம் அமைவது உறுதி என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu