மனிதர்கள் மீதான பரிசோதனையைத் தொடங்குகிறது நியூராலிங்க் நிறுவனம்

September 21, 2023

எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம், மனித மூளையில் சிப் செலுத்தி பரிசோதனையில் ஈடுபட உள்ளது. இதற்கு முன்னதாக குரங்குகள் மீது நடத்தப்பட்ட சோதனைகள் வெற்றி பெற்ற நிலையில், நேரடியாக மனிதர்கள் மீது பரிசோதனை செய்ய நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி, விரைவில் மனித பரிசோதனையை நியூராலிங்க் தொடங்க உள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பரிசோதனையில் ஈடுபட தகுதியானவர்களாக சொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் நிறுவனத்திடம் தாமாக முன்வந்து விண்ணப்பிக்கும் பட்சத்தில், அவர்களது மூலையில் சிப் […]

எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம், மனித மூளையில் சிப் செலுத்தி பரிசோதனையில் ஈடுபட உள்ளது. இதற்கு முன்னதாக குரங்குகள் மீது நடத்தப்பட்ட சோதனைகள் வெற்றி பெற்ற நிலையில், நேரடியாக மனிதர்கள் மீது பரிசோதனை செய்ய நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி, விரைவில் மனித பரிசோதனையை நியூராலிங்க் தொடங்க உள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பரிசோதனையில் ஈடுபட தகுதியானவர்களாக சொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் நிறுவனத்திடம் தாமாக முன்வந்து விண்ணப்பிக்கும் பட்சத்தில், அவர்களது மூலையில் சிப் பொருத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த பரிசோதனை வெற்றியடையும் பட்சத்தில், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய தீர்வு கிடைக்கும். நியூராலிங்க் தயாரித்துள்ள சிப், எண்ணங்களை கணித்து அதன் மூலமாக கணினி செயல்பாடுகளை மேற்கொள்ள உள்ளது. அதாவது, பக்கவாதம் பாதித்த நபரின் எண்ணத்தின் படி, கணினியில் உள்ள மவுஸ் மற்றும் கீபோர்டு கட்டுப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு இந்த பரிசோதனை நடத்தப்பட உள்ளது. மேலும், இந்த பரிசோதனை வெற்றியடைந்தால், அடுத்த 10 ஆண்டுகளில், இந்த சிப் சந்தையில் வெளியாகும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu