எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில், 14 வயது நிரம்பிய மென்பொருள் பணியாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் இள வயது நபர் என்று பெருமையை அவர் பெற்றுள்ளார். கைரன் குவாசி என்ற அந்த நபர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டது குறித்து லிங்க்ட் இன் தளத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தனது லிங்க்ட் இன் பயோடேட்டாவில், அவர் தனது 11 வயதில், சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தின் மிகவும் இள வயது பொறியாளராக பட்டம் பெற்றிருப்பது குறித்து பதிவிட்டுள்ளார். மேலும், இள வயது பட்டதாரியாக சாதனை புரிந்த அவர், தற்போது இளவயது பணியாளராக சாதனை புரிய உள்ளதாக கூறியுள்ளார். மேலும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைப்பு பிரிவில் இவர் பணியாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.