எலோன் மஸ்கின் எக்ஸ் சமூக தளத்தில், பிரபல நிறுவனங்கள் விளம்பரம் செய்வதை நிறுத்தி உள்ளன.
சமீபத்தில், யூதர்களுக்கு எதிரான கருத்தை எலான் மஸ்க் ஆதரித்திருந்தார். குறிப்பாக, யூதர்கள் வெள்ளையர்களை வெறுக்கிறார்கள் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு, டிஸ்னி, ஆப்பிள், ஐபிஎம், வார்னர் ப்ரோஸ், என்பிசி யுனிவர்சல் போன்ற முன்னணி நிறுவனங்கள், தங்கள் விளம்பரங்களை நிறுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. எக்ஸ் தளத்தில் விளம்பரங்களை நிறுத்திய நிறுவனங்களுக்கு தகாத வார்த்தைகளில் எலோன் மஸ்க் பதிலளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் சமூக வலைதளத்தில் விளம்பர வருவாய் மிகப்பெரிய அங்கம் வகிக்கும் நிலையில், பெரு நிறுவனங்கள் விளம்பரங்களை நிறுத்துவது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.














