யூடியூப் தளத்துக்கு போட்டியாக புதிய வீடியோ தளம் ஒன்றை எலான் மஸ்க் கொண்டு வர உள்ளார். ஸ்மார்ட் டிவிகளில் இந்த செயலி இயங்கும். அமேசான் மற்றும் சாம்சங் பயனாளர்களுக்கு அடுத்த வாரம் முதல் இந்த புதிய தளம் பயன்பாட்டுக்கு வெளியாகும். இந்த தளத்தின் மூலம், பயனர்கள் நீண்ட வீடியோக்களை காண முடியும்.
எலான் மஸ்கின் எக்ஸ் சமூக பக்கத்தில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, விரைவில் வீடியோ தளம் கொண்டு வரப்படுவதாக எலான் மஸ்க் பதிவிட்டார். தற்போது, இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், எக்ஸ் தளத்தில் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டு வரும் எலான் மஸ்க், பணப்பரிமாற்றம் செய்வதற்கான உரிமத்தை வாங்கும் நடவடிக்கைகளில் களமிறங்கி உள்ளதாக கூடுதல் தகவல் வெளியாகி உள்ளது.