டெஸ்லாவின் முதல் கனரக ட்ரக் வாகனத்தை அறிமுகம் செய்த எலான் மஸ்க்

December 2, 2022

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், இந்த நிறுவனத்தின் முதல் கனரக செமி ட்ரக் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளார். பெப்சிகோ நிறுவனத்திற்கு இந்த ட்ரக் விற்கப்பட்டுள்ளது. இந்த ட்ரக்கின் விலை, கொள்ளளவு மற்றும் செயல்திறன் குறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து பேசிய எலான் மஸ்க், "மற்ற டீசல் டிரக் வாகனங்களை விட இந்த மின்சார செமி டிரக் வாகனம் அதிக செயல்திறன் கொண்டது. மேலும், கார்பன் வெளியேற்றம் இல்லாதது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 500 மைல் […]

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், இந்த நிறுவனத்தின் முதல் கனரக செமி ட்ரக் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளார். பெப்சிகோ நிறுவனத்திற்கு இந்த ட்ரக் விற்கப்பட்டுள்ளது. இந்த ட்ரக்கின் விலை, கொள்ளளவு மற்றும் செயல்திறன் குறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து பேசிய எலான் மஸ்க், "மற்ற டீசல் டிரக் வாகனங்களை விட இந்த மின்சார செமி டிரக் வாகனம் அதிக செயல்திறன் கொண்டது. மேலும், கார்பன் வெளியேற்றம் இல்லாதது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 500 மைல் தொலைவு வரை செல்லும் திறன் படைத்தது என்பது சோதனை ஓட்டத்தில் உறுதியாகியுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், யானை ஒன்று சிறுத்தை வேகத்தில் செல்வது போல இந்த ட்ரக் செயல்படும்" என்று கூறியுள்ளார். ஆனால், பேட்டரி மூலம் இயங்கும் இந்த கனரக வாகனத்தின் திறன் குறித்து முழுமையான நம்பிக்கை ஏற்படவில்லை என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu