காசா பகுதியில், இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இஸ்ரேல் தாக்குதலின் போது, காசாவின் தொலைத்தொடர்பு கேபிள் துண்டிக்கப்பட்டது. இதனால், காசாவில் இணைய சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், எலான் மஸ்க், தனது ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் மூலம் செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக, உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய காலத்தில், எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் இணைய சேவையை உக்ரைனுக்கு வழங்கினார். தற்போது, காசாவுக்கு இணைய சேவை வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், துண்டிக்கப்பட்ட தொலைதொடர்பு கேபிள்கள் சரி செய்யப்பட்டு வருவதாக பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது. எனவே, காசாவில் படிப்படியாக இணைய சேவை மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.