உலக பணக்காரர்கள் பட்டியலில் லூயி ஊட்டன் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக, உலக பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் மற்றும் லூயி ஊட்டன் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோருக்கு இடையே முதல் இடத்திற்கான போட்டி தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், தற்போது முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி, பெர்னார்ட் அர்னால்ட் முதலிடம் பிடித்துள்ளார். ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் பட்டியலில், பெர்னார்ட் அர்னால்டின் மொத்த சொத்து மதிப்பு 207.6 பில்லியன் டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது. அதுவே, எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 204.7 பில்லியன் டாலர்களாக உள்ளது. இவர்கள் இருவரை தொடர்ந்து, அமேசான் தோற்றுநர் ஜெப் பெசோஸ், 181.3 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.