ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான பயணமாக, எலான் மஸ்க் புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார் – டிரம்புடன் உறவு முறிந்தது.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவராகவும், உலகின் செல்வமிக்கவர்களில் ஒருவராகவும் இருக்கும் எலான் மஸ்க், கடந்த ஆண்டின் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக இருந்தார். ஆனால், ‘BIG BEAUTIFUL’ மசோதாவை எதிர்த்ததையடுத்து அவருடன் கருத்து முரண்பாடுகளும், பதவியிலிருந்து விலகலும் ஏற்பட்டது. இந்நிலையில், ‘அமெரிக்கா’ என்ற புதிய கட்சியை தொடங்கிய மஸ்க், மக்கள் சுதந்திரத்திற்காகவே இந்த முயற்சி என தெரிவித்துள்ளார். இரண்டு கட்சிகள் மட்டுமே ஆளும் நிலையை மாற்றுவதே இக் கட்சியின் நோக்கம். இதனுடன், டெஸ்லா நிறுவன நிதி தலைவராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த வைபவ் தனேஜாவை கட்சியின் பொருளாளராக நியமித்திருப்பது சிறப்பாக இருப்பினும், சிலர் வெளிநாட்டவரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், டிரம்ப்–மஸ்க் இடையேயான அரசியல் மோதல் மேலும் தீவிரமாகியுள்ளது.