மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தில், நாசாவின் ஒப்பந்தத்தை வென்ற ஸ்பேஸ் எக்ஸ்

November 18, 2022

மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தில் இரண்டாவது முறையாக நாசாவின் ஒப்பந்தத்தை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், அண்மையில் நிலவுக்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் ஸ்டார்ஷிப் திட்டத்தை பரிசோதனை செய்தது. அப்போது, இதற்கான 14 என்ஜின்களும் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டன. விரைவில், இந்த ஸ்டார்ஷிப் திட்டத்தின் முதல் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த புதிய ஒப்பந்தம் மூலம், வரும் 2027 ஆம் ஆண்டு, மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் […]

மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தில் இரண்டாவது முறையாக நாசாவின் ஒப்பந்தத்தை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், அண்மையில் நிலவுக்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் ஸ்டார்ஷிப் திட்டத்தை பரிசோதனை செய்தது. அப்போது, இதற்கான 14 என்ஜின்களும் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டன. விரைவில், இந்த ஸ்டார்ஷிப் திட்டத்தின் முதல் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த புதிய ஒப்பந்தம் மூலம், வரும் 2027 ஆம் ஆண்டு, மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ஆர்டெமிஸ் 4 திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ள எலான் மஸ்க், "நாசாவின் எதிர்பார்ப்பை ஸ்பேஸ் எக்ஸ் பூர்த்தி செய்யும். ஒருபோதும் நாசாவை கைவிடாது" என்று கூறியுள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu