எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் பென்டகனுக்கு நூற்றுக்கணக்கான உளவு செயற்கைக்கோள்களை உருவாக்கி வருகிறது.
பென்டகனுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்படும் உளவு செயற்கைக்கோள்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷீல்டு வர்த்தக மையத்தில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. பூமியிலிருந்து குறைவான தூரத்தில் நிறுவப்படும் செயற்கை கோள்களாக இவை இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. கடந்த 2021ல் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்த செயற்கைக்கோள் திட்டம் முழுமையான வெற்றி பெறும் பட்சத்தில், அமெரிக்க ராணுவத்தின் வலிமை அடுத்த கட்டத்தை அடையும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், உலகின் எந்த பகுதியிலும் விரைவான மற்றும் துல்லியமான தாக்குதல் நடத்த துணை செய்யும் என கூறப்பட்டுள்ளது.