மெக்சிகோவில் இலவச இணைய சேவை வழங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
வரும் 2026 ஆம் ஆண்டு வரை, மெக்சிகோவில் இலவச இணைய சேவை வழங்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் மெக்சிகோ அரசாங்கம் மற்றும் ஸ்டார்லிங்க் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 89.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என சொல்லப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை முறையான டெண்டர் மூலம் ஸ்டார்லிங்க் கைப்பற்றி உள்ளதாக மெக்சிகோ அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த இலவச இணைய சேவை வழங்கும் திட்டத்தில், ஸ்டார்லிங்க், கால்டிரான் உட்பட 9 நிறுவனங்கள் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.