ஜெம்கோவாக் ஓஎம் பூஸ்டர் தடுப்பு மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அவசரகால அனுமதி அளித்துள்ளது.
ஒமிக்ரான் கொரோனா வைரஸ் திரிபையும் எதிர்க்கக் கூடிய எம்ஆர்என்ஏ அடிப்படையிலான தடுப்பு மருந்துக்கு ஜென்னோவா பயோபார்மாசூட்டிக்கல் நிறுவனம், பயோடெக்னாலஜி துறையுடன் இணைந்து தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது. ஜெம்கோவாக் ஓஎம் என்ற இந்த பூஸ்டர் தடுப்பு மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியை தந்துள்ளது. இதை 2-8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். ஊசி இல்லாத சாதன அமைப்பை பயன்படுத்தி இந்த தடுப்பு மருந்தை செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.