திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு- ஜெர்மன் பாராளுமன்றம் ஒப்புதல்

June 24, 2023

திறமையான தொழிலாளர்களை உலகெங்கிலும் இருந்து கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்ட குடியேற்ற சீர்திருத்தங்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜெர்மனி நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டிற்கு திறமையான தொழிலாளர்களை உலகெங்கிலும் இருந்து கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்ட குடியேற்ற சீர்திருத்தங்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆளும் மைய-இடது கூட்டணியால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத்திருத்தம் தொடர்பாக, நேற்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக 388 உறுப்பினர்கள் […]

திறமையான தொழிலாளர்களை உலகெங்கிலும் இருந்து கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்ட குடியேற்ற சீர்திருத்தங்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஜெர்மனி நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டிற்கு திறமையான தொழிலாளர்களை உலகெங்கிலும் இருந்து கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்ட குடியேற்ற சீர்திருத்தங்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆளும் மைய-இடது கூட்டணியால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத்திருத்தம் தொடர்பாக, நேற்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக 388 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 234 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்; 31 பேர் வாக்களிக்கவில்லை. கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் மற்றும் அதன் பவேரிய சகோதரக் கட்சியான கிறிஸ்டியன் சோஷியல் யூனியன் இணைந்த பழமைவாத பாராளுமன்ற குழு இச்சட்டத்திற்கு எதிராக வாக்களித்தது.

வேலைக்கான விசா விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தொழில்முறை தகுதிகள், வயது மற்றும் மொழித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டில் நுழைவதில் இருந்த தடைகளை குறைக்கும் வகையில் புள்ளிகள் அடிப்படையிலான அமைப்பு இச்சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu