சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் 16 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
இந்தியாவில் நக்சலைட்டுகளின் அட்டகாசம் அதிகம் காணப்படும் மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. இங்கு, சிறப்பு அதிரடிப் படைவீரர்கள் நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கைகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள கேர்லாபால் பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினருடன் நக்சலைட்டுகளுக்கிடையே என்கவுண்டர் நடந்தது. இதில் 16 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.














