சத்தீஸ்கர் அபுஜ்மாத் பகுதியில் மோதல்: 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை – தீவிர தேடுதல் வேட்டை தொடருகிறது!

நாராயண்பூர் மாவட்டத்தில் காவல்துறையுடன் நடந்த மோதலில் 6 மாவோயிஸ்ட்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்; இந்தியாவை மாவோயிஸ்ட்கள் இல்லாத நாடாக மாற்றும் பணி தீவிரமடைந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மாத் பகுதியில் காவல்துறையுடன் இணைந்த பாதுகாப்புப்படை வீரர்கள் மேற்கொண்ட கூட்டு தேடுதல் வேட்டையின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 6 மாவோயிஸ்ட்கள் சுட்டு கொல்லப்பட்டனர். ரகசிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில் ஏ.கே.47 துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த 18 மாதங்களில் மட்டும் 421 மாவோயிஸ்ட்கள் […]

நாராயண்பூர் மாவட்டத்தில் காவல்துறையுடன் நடந்த மோதலில் 6 மாவோயிஸ்ட்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்; இந்தியாவை மாவோயிஸ்ட்கள் இல்லாத நாடாக மாற்றும் பணி தீவிரமடைந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மாத் பகுதியில் காவல்துறையுடன் இணைந்த பாதுகாப்புப்படை வீரர்கள் மேற்கொண்ட கூட்டு தேடுதல் வேட்டையின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 6 மாவோயிஸ்ட்கள் சுட்டு கொல்லப்பட்டனர். ரகசிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில் ஏ.கே.47 துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த 18 மாதங்களில் மட்டும் 421 மாவோயிஸ்ட்கள் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் 2026 மார்ச் 31க்குள் இந்தியா, மாவோயிஸ்ட் தீவிரவாதத்திலிருந்து முழுமையாக விடுபடும் என உறுதியளித்ததையடுத்து, தேடுதல் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மாவோயிஸ்ட்கள் பாதிப்புக்குள்ளான முக்கிய மாவட்டங்களில் நாராயண்பூர் மாவட்டமும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu