ஓஷன் குரூப் நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை

January 23, 2024

ஓஷன் குரூப் நிறுவனத்தின் மீது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை சுமார் ரூபாய் 450 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது. ஓஷன் குரூப் நிறுவனம் சென்னை தலைமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த ஆண்டு 1000 கோடி முறைகேடாக வருவாய் ஈட்டியதாக புகார் எழுந்ததன் அடிப்படையில் இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெளிநாட்டு முதலீடுகள், சட்ட விரோத பண பரிவர்த்தனை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கிடைத்தது. […]

ஓஷன் குரூப் நிறுவனத்தின் மீது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை சுமார் ரூபாய் 450 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது.
ஓஷன் குரூப் நிறுவனம் சென்னை தலைமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த ஆண்டு 1000 கோடி முறைகேடாக வருவாய் ஈட்டியதாக புகார் எழுந்ததன் அடிப்படையில் இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெளிநாட்டு முதலீடுகள், சட்ட விரோத பண பரிவர்த்தனை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கிடைத்தது. அமலாக்கத்துறை இதனை வழக்கில் இணைத்துக் கொண்டு விசாரணையை தொடங்கியது. கடந்த 18ஆம் தேதி சென்னையில் இந்நிறுவனத்திற்கு சொந்தமான ஏழு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை ஐந்து நாட்களாக நடைபெற்று வந்தது. மேலும் 33 ரூபாய் லட்சம் ரொக்கம், 450 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை அமலாக்க துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu