அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்றம் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பாலாஜி கைது செய்து மூன்று மாதங்கள் ஆகும் நிலையில் தற்போது ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்ததால் இதற்கு பதில் அளிக்குமாறு அமலக்கதுறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் அமலாக்க துறையினர் அதிரடியாக அவருக்கு தொடர்புபை இடங்களில் தொடர்ச்சியாக சோதனைகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் 10 இடங்களில் சோதனை ஈடுபட்டுள்ளனர். இதில் சென்னை அண்ணா நகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ், முகப்பேரில் உள்ள இன்ஜினியர் திலகம், நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் போக்குவரத்து மேலாளர் ஜெகநாதன் உள்ளிட்ட வீடுகளில் சோதனை நடைபெற்றது. இதேபோன்று திண்டுக்கல், திருச்சி புதுக்கோட்டை, வேலூர், நாமக்கல், ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது. மேலும் செந்தில் பாலாஜி நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.