சென்னையில் லைகா நிறுவனம் தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
சென்னையில் தொடங்கப்பட்ட லைகா நிறுவனம் 2014-ம் ஆண்டு முதல் தமிழில் படங்களைத் தயாரித்து வருகிறது. விஜய் நடித்த கத்தி, கோலமாவு கோகிலா, பொன்னியின் செல்வன் பாகம்-1, 2 உள்பட 15-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. இவற்றின் மூலம் லைகா நிறுவனம் அதிக லாபம் ஈட்டியதாகக் கூறப்படுகிறது. அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் லைகா நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
அதனடிப்படையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 8 இடங்களில் நேற்று சோதனை மேற்கொண்டனர். சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.