பேடிஎம் நிறுவனத்துக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸ்

March 4, 2025

வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பண பரிமாற்றத்தில் விதிமீறல் காரணமாக பேடிஎம் நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஓ.சி.எல். மற்றும் அதன் துணை நிறுவனங்கள் லிட்டில் இன்டர்நெட் மற்றும் நியர்பை இண்டியாவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வெளிநாட்டில் முதலீடு செய்தும், அன்னிய நேரடி முதலீடு பெற்றும், அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட (பெமா) விதிமுறைகளை மீறியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் ரூ.611 கோடி பண பரிமாற்றம் […]

வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பண பரிமாற்றத்தில் விதிமீறல் காரணமாக பேடிஎம் நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஓ.சி.எல். மற்றும் அதன் துணை நிறுவனங்கள் லிட்டில் இன்டர்நெட் மற்றும் நியர்பை இண்டியாவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வெளிநாட்டில் முதலீடு செய்தும், அன்னிய நேரடி முதலீடு பெற்றும், அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட (பெமா) விதிமுறைகளை மீறியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் ரூ.611 கோடி பண பரிமாற்றம் செய்ததாக குற்றம் சொன்னது. இதற்கிடையில், பேடிஎம் தனது பிரச்சனையை சட்டத்தின் படி தீர்க்க முயற்சிக்கின்றது என தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu