உலக அளவில் குறைந்த திரட்ஸ் செயலி பயன்பாடு

July 24, 2023

கடந்த ஜூலை 6ம் தேதி, ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனத்தின் திரட்ஸ் செயலி அறிமுகமானது. மிகக் குறுகிய காலத்தில் அதிக பயனர்களை பெற்ற செயலி என்ற வரலாறை படைத்தது. இந்த நிலையில், தற்போது, திரட்ஸ் செயலி பயன்பாடு உலக அளவில் பரவலாக குறைந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதிக பயனர்களை குறுகிய காலத்தில் பெற்றாலும், நாளுக்கு நாள் திரட்ஸ் செயலியின் தினசரி பயன்பாடு குறைந்து வருகிறது என சென்சார் டவர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம், கடந்த […]

கடந்த ஜூலை 6ம் தேதி, ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனத்தின் திரட்ஸ் செயலி அறிமுகமானது. மிகக் குறுகிய காலத்தில் அதிக பயனர்களை பெற்ற செயலி என்ற வரலாறை படைத்தது. இந்த நிலையில், தற்போது, திரட்ஸ் செயலி பயன்பாடு உலக அளவில் பரவலாக குறைந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதிக பயனர்களை குறுகிய காலத்தில் பெற்றாலும், நாளுக்கு நாள் திரட்ஸ் செயலியின் தினசரி பயன்பாடு குறைந்து வருகிறது என சென்சார் டவர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம், கடந்த ஜூலை 6 முதல் 22 ஆம் தேதி வரை, திரட்ஸ் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூலை ஆறாம் தேதியுடன் ஒப்பிடுகையில், ஜூலை 18-ஆம் தேதி திரட்ஸ் தினசரி பயன்பாட்டில் 75% சரிவு உணரப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 7ஆம் தேதி செயலி பதிவிறக்கத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை 18ம் தேதி 22% சரிவு காணப்பட்டுள்ளது. எனவே, திரட்ஸ் செயலியின் பதிவிறக்கம் மற்றும் பயன்பாடு இரண்டிலுமே கணிசமான சரிவு பதிவாகியுள்ளது. குறிப்பிட்ட நாடு என்று அல்லாமல் உலக அளவில் பரவலாக இது காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், திரட்ஸ் செயலியின் வருகை மூலம் ட்விட்டருக்கு மிகப்பெரிய பாதிப்பு நேரும் என்று கருத்தப்பட்ட நிலையில், இந்த நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் ட்விட்டருக்கு சாதகமாக வெளிவந்துள்ளன. அதன்படி, ட்விட்டர் பயன்பாட்டில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை எனவும், சில பகுதிகளில் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu