பொறியியல் கல்லூரி தற்காலிக ஒதுக்கீடு விவரம் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் இணையவழி கலந்தாய்வு தற்போது நடைபெறுகிறது. 3-வது சுற்று கலந்தாய்வு கடந்த 23-ந் தேதி தொடங்கியது. பொதுப் பிரிவில் 93,059 பேர் தகுதி பெற்றனர். இதில், விருப்ப கல்லூரி மற்றும் பாடப் பிரிவுகளை தேர்ந்தெடுத்த 63,843 மாணவர்களுக்கு நேற்று காலை 10.30 மணிக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தற்காலிக ஒதுக்கீட்டை இன்று மாலை 5.30 மணி வரை உறுதி செய்ய வேண்டும். உறுதிசெய்யும் மாணவர்களுக்கு நாளை காலை 10.30 மணிக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் கூறினார்.