நீட் தேர்வு முடிவுகள் தாமதத்தால் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தாமதம் அடைகின்றன.
மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் தகுதி தேர்வு முடிவு வெளிவந்தும் நாடு முழுவதும் இன்னும் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்படவில்லை. நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகளின் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் உருவாகி உள்ளன. மேலும் நீட் தேர்வு குறித்து இதுவரை ஆலோசனை விதிகள் மற்றும் அட்டவணை வெளியிடப்படவில்லை. இதனால் தமிழகத்தில் மாணவர் சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் எம்.பி.பி.எஸ் மட்டும் இன்றி பல், இந்திய மருத்துவம், ஹோமியோபதி, நர்சிங் உள்ளிட்ட மருத்துவ படிப்புகள், பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கையில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் மருத்துவ ஏஜென்சிகளிடமிருந்து கால நீட்டிப்பு கேட்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான நடைமுறைகளை தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் தொடங்கியுள்ளது. அதன்படி வருகிற பத்தாம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அப்பொழுது கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.