பொறியியல் படிப்பு களுக்கான பொது சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் 433 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 938 பொறியியல் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. இதில் 2024 -2025 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று பொது சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 8,948 இடங்கள் உள்ளன. ஆனால் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு 416 மாணவர்களை தகுதி பெற்றுள்ளனர். விளையாட்டு பிரிவில் 456 இடங்களுக்கு 113 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு 143 இடங்களுக்கு 243 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதன் பின்னர் வரும் 27 ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும். பின்னர் 28ஆம் தேதி இன்ஜினியரிங் பொறியியல் படிப்பிற்கான இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும்.