உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 40ஆவது லீக் ஆட்டம் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து இடையே நாளை நடைபெறுகிறது.உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து இடையே புனேவில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி ஏழு ஆட்டத்தில் ஒரு வெற்றி ஆறு தோல்வியுடன் இரண்டு புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. நெதர்லாந்து அணி இரண்டு வெற்றி ஐந்து தோல்வி பெற்றுள்ளது. இந்த இரண்டு அணிகளும் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்து விட்டன. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் சாம்பியன் டிராபி போட்டிக்கு தற்போது உலக கோப்பையில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும். எனவே இவ்விரண்டு அணிகளும் அந்த எட்டு இடங்களில் இடம் பெற போராட உள்ளன.