மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு- எண்ணூர் மீனவர்கள் முற்றுகை போராட்டம்.

எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரம் அமைக்கும் பணியை எதிர்த்து மீனவ மக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். கொசஸ்தலை ஆற்றில் வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்க பணிக்கு மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு காட்டுக்குப்பம், சின்ன குப்பம், பெரியகுப்பம், முகத்துவாரகுப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், சிவன் படை வீதிக்குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது சுமார் 20க்கும் மேற்பட்ட படகுகளில் கொசஸ்தலை […]

எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரம் அமைக்கும் பணியை எதிர்த்து மீனவ மக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

கொசஸ்தலை ஆற்றில் வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்க பணிக்கு மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு காட்டுக்குப்பம், சின்ன குப்பம், பெரியகுப்பம், முகத்துவாரகுப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், சிவன் படை வீதிக்குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது சுமார் 20க்கும் மேற்பட்ட படகுகளில் கொசஸ்தலை ஆற்றிற்குச் சென்று மீனவர்கள் மின் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து முற்றுகையிட்டனர். இதனா தங்களது மீன்பிடித்தொழில் பாதிக்கப்படுவதாகவும், மீன் இனப்பெருக்க வளம் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu